ஓட்டுகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
 Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை

தமிழிஷ் பற்றி ...


தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம். ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற பார்வையளர்கள் இங்கு பகிர்ந்து கொண்டவை தான். இங்கு பதிவு செய்யப்படும் ஒவ்வொரு செய்தியும் பார்வையாளர்களால் ஓட்டளிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஓட்டுகள் பெற்றபின் முதல் பக்கத்தை (Popular) அடைகின்றன.

பங்களிப்பு : செய்திகள் சம்பந்தமான உங்களது கருத்துக்களை பின்னூட்டம் (comments) மூலமாக வெளிப்படுத்துங்கள். "", "" மூலமாக அடுத்தவர் பின்னூட்டங்களை (comments) மதிப்பிடுங்கள். மேலும் பங்களிக்க, இணையத்தில் சுவரஸ்யமான செய்தியை கண்டுபிடித்து இங்கு submit செய்யுங்கள். அவை உடனடியாக, பார்வையாளர்கள் ஓட்டிட வசதியாக Upcoming பகுதியில் பட்டியலிடப்படும். .

தமிழிஷ் என்ன சிறப்பு ?

1. தமிழில் வாசிக்க, நிகழ்வுகள் பற்றி பலதரப்பட்டோரின் எண்ணங்களை தெரிந்துகொள்ள.

2. இணையத்தில் பரவியுள்ள தமிழ் பக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. இங்குள்ள ஒவ்வொரு செய்தியும் உங்களைப்
போன்ற ஒருவர் பகிர்ந்து கொண்டதுதான். இணையத்தில் நீங்கள் உலாவும் போது நீங்கள் காணும் தமிழ் பக்கங்களை
இங்கே பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் படித்து ரசித்ததை அனைவரும் ரசிக்கலாமே. நீங்கள் அனவருக்கும் தெரிவிக்க
விரும்பும் செய்தி உள்ள பக்கங்களை இங்கே பகிரலாம்.

3. இங்கே நீங்கள் தான் மஹாராஜா, எடிட்டர் எல்லாம். வாசகர்கள் பகிரும் அனைத்து பக்கங்களும், "Upcoming"
பகுதியில் பட்டியலிடப்படும். நல்ல/சுவையான செய்திகளும் இருக்கலாம். சில குப்பை செய்திகளும் இருக்கலாம். அதை
ஒழுங்குபடுத்தும் சுவையான பொறுப்பு உங்களை சார்ந்தது. நீங்கள் காணும் செய்தி ஆஹா! அட்டகாசம்!! என்றால்
"Vote" கிளிக் செய்து உங்கள் ஆதரவை அந்த பதிவிற்கு [இணைய பக்கம்] தெரிவியுங்கள். அந்த செய்தி குப்பை என்று
நீங்கள் கருதினால் "Bury" கிளிக் செய்யுங்கள்.

4. அதிக நபர்களால் "Vote" அளிக்கப்படும் பக்கங்கள், குறிப்பிடப்பட்ட ஓட்டுகள் பெற்ற பின்பு Popular பக்கங்களாக
உடனடியாக முன்னேற்றம் கண்டு முதல் பக்கத்தில் பட்டியலிடப்படும். அதிக அளவு "Bury" செய்யப்பட்ட பக்கங்கள்
tamilish பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும்.
[குறிப்பு : இந்த ஓட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு ஒவ்வொரு பிரிவை பொறுத்து மாறுபடும். எடுத்துகாட்டாக சில
பிரிவுகளில் உள்ள பக்கங்கள் மூன்று ஓட்டுகளில் Popular ஆகலாம். சில பிரிவுகளில் உள்ள பக்கங்கள் Popular ஆக
பத்து ஓட்டுகள் தேவைப்படலாம்.

5. இணைய பக்கங்களை Bookmarking செய்துகொள்ளவும் நீங்கள் tamilish -ஐ உபயோக படுத்தலாம்.
Bookmarking என்றால் என்ன?
குறித்து கொள்ளுதல். நாம் சிலவிசயங்கள் மறக்க கூடாது என்பதற்காக ஒரு சிட்டை/டைரியில் குறிப்பெடுத்து
கொள்வதில்லையா? அது போலதான் இதுவும். நீங்கள் நாள்தோறும் நூற்றுகணக்கான பக்கங்களை இணையத்தில்
காண்பீர்கள். சில பக்கங்களை நியாபகம்/சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். அதை நீங்கள் tamilish- ல் செய்யலாம்.
நீங்கள் சேமிக்க நினைக்கும் பக்கங்களை tamilish- ல் பகிர்ந்து சேமித்து வைத்து கொள்ளலாம். அடுத்தவர் பகிரும்
பக்கங்களையும் சேமித்து கொள்ளலாம்.

6. நம்முடைய கருத்தை நமக்குள் வைத்து கொள்ளாமல், நாலு பேர் காதுகளில் போடுவது நல்ல விஷயம் தானே.
அதற்கும் வாய்ப்பளிக்கிறது , Tamilish. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள செய்திகள் பற்றி உங்களுக்கு ஆதரவு / எதிர்ப்பு
கருத்துகள் இருக்கலாம். அதை Comments ஆக வெளிப்படுத்துங்கள். சாதி/மத துவேஷ கருத்துகளையும், தனி மனித
தாக்குதல் கருத்துகளையும் தவிருங்கள். எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில்
உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும். பயனுள்ள வகையில் விமர்சனம் செய்யுங்கள். அடுத்தவர் கருத்துகளை மதிப்பிட
ஓட்டு வசதியும் Comments பகுதியில் உண்டு.

7. நீங்கள் எழுத்தாளரா? வலைப்பூ (Blog) வைத்துள்ளீர்கள? இணையத்தளம் வைத்துள்ளீர்களா? உங்களது சுவையான
பக்கங்களை tamilish வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அது உங்களுக்கும் tamilish வாசகர்களுக்கும் உபயோகமாக
இருக்கும்.

8. உங்கள் ஒத்த கருத்துள்ள நண்பர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இங்கு கண்டு கொள்ளுங்கள்.

கீழே உள்ள படம் பதிவு பற்றிய விளக்கம் கொடுக்கும் (பெரிதாக்க படத்தை Click செய்யவும் )

 

Tamilish -ல் வெப் பக்கங்களை "Submit" செய்வது எப்படி?

1. முதலில் நீங்கள் 'Submit' செய்யப்போகும் சுவையான செய்தி/வீடியோ/படம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த பக்கத்தின் 'Url' -ஐ 'Copy' செய்து கொள்ள வேண்டும்.

எடுத்துகாட்டாக இந்த பக்கத்தை (http://www.aol.in/tamil/movies/specials/2008/07/06-california-varsity-honour-manorama-doctorate.html )  'Submit' செய்ய போவதாக கொள்வோம். கீழே உள்ள படங்கள் எப்படி 'Url' பெறுவது என்பதை எளிதாக விளக்கும்.




2. அடுத்து 'Submit New' -ஐ 'Click' செய்யவும். அது உங்களை 'Submit' பக்கத்திற்கு எடுத்து செல்லும். 'Submit' மொத்தம் மூன்று பகுதிகளை கொண்டது.

 



Step 1 of 3

நீங்கள் 'Copy' செய்த 'Url' -ஐ இங்கே 'Paste' செய்யவும்.  அடுத்து 'Continue' -ஐ click செய்யவும்.



Step 2 of 3

 

Story Title - உங்கள் பதிவிற்கு ஏற்றதாக, நல்ல , எளிதில் அனைவரையும் கவரக்கூடிய தலைப்பை கொடுங்கள்.

Tags : உங்கள் பதிவு பற்றிய குறி சொற்களை கொடுக்கவும். எடுத்துகாட்டாக நமீதா புகைப்படங்கள் பற்றிய பதிவாக இருந்தால், "namitha,nadigai,image,pugapippada thoguppu,tamil,cinema,சினிமா,நமீதா,படம்" என்று கொடுக்கலாம்.

Upload Image from : Url / Computer

உங்கள் பதிவு சம்பந்தமான படத்தை இங்கே கொடுங்கள். படங்கள் கொடுக்கப்பட்டால் பதிவுகள் அதிகம் கவரப்படும்.   பக்கங்களிலிருந்து, அது சம்பந்தமான படங்களை நீங்கள் காணலாம். அவற்றை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். இல்லையெனில் "Upload" செய்வதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது.

Computer - பதிவு சம்பந்தமான படம் உங்கள் கணினியில் இருந்தால், இத்தனை உபயோக படுத்தவும்.

Url - உங்கள் பதிவு சம்பந்தமான படத்தை பதிவு சம்பந்தமான இணைய பக்கத்திலிருந்து Url தேர்வு செய்து கொடுக்கலாம். படத்தின் 'Url' பெறுவது எப்படி?

நீங்கள் Internet Explorer பயன்பாட்டாளர் என்றால் படத்தின் மீது 'Right Click' செய்து "Properties" தேர்வு செய்யவும். அடுத்து வரும் 'Dialog Box' -இல் 'Address : (Url)' -ஐ copy செய்யவும். கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

 


 


நீங்கள் Firefox பயன்பாட்டாளர் என்றால் , படத்தின் மீது "Right Click" செய்து "Copy Image Location" தேர்வு செய்யவும். கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

 



இதுதான் Image Url . இத்தனை Tamilish submit பக்கத்தில் 'Upload Image from Url" பகுதியில் Paste செய்யவும். கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

 



குறிப்பு : சில பதிவுகளுக்கு படங்கள் தானாகவே தேர்வு செய்து கொள்ளப்படும். எடுத்துகாட்டு -  youtube video பக்கங்கள்


Description : பதிவு பற்றி இங்கே எழுதவும்.

Summary : பதிவு பற்றிய சுருக்கம் இங்கே எழுதவும். பதிவு பற்றி உங்கள் கருத்துகளையும் இங்கே எழுதலாம்

Category : பதிவுக்கு சம்பந்தமான பிரிவை தேர்ந்து எடுக்கவும்.

 



Preview and Submit : எல்லாம் முடிந்தாயிற்று. இப்போது "Preview and Submit" Click செய்யவும்.



Step 3 of 3


இந்த பகுதி, உங்கள் பதிவு "Tamilish"-ல் தோன்ற போகும் மாதிரியை கட்டும். அது சரி என்றால் 'Submit' செய்யவும். மாற்றங்கள் செய்ய விரும்பினால் "Modify" click செய்யவும். Submit செய்தவுடன் உங்கள் பதிவு பார்வையாளர்கள் ஓட்டிட வசதியாக Upcoming பகுதியில் உடனடியாக பட்டியலிடப்படும்.

 

 

மேலும் தளம் தொடர்பான சந்தேகங்களுக்கு service@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்

 




What is Tamilish?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

Type in Tamil Here

Type here and copy text. eg: Type "Amma + Space bar" will give tamil word "அம்மா". Open a new window

Popular

இணைப்பு கொடுக்க

Tamilish
Code :
Tamilish - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ செய்து Copy உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.